காஞ்சிபுரத்தில் பிள்ளை பெற்ற பேரரசி அலங்காரத்தில் ஸ்ரீ ரேணுகாம்பாள்
காஞ்சிபுரம், அக்.25:
காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு பகுதியில் அமைந்துள்ளது அன்னை ரேணுகாம்பாள் திருக்கோயில். இக்கோயிலில் நவராத்திரித் திருவிழா இம்மாதம் 14 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது.
விழாவினைத் தொடர்ந்து மூலவரும், உற்சவரும் தினசரி வெவ்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தினசரி இரவு பரதநாட்டிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சீமந்தப்புத்திரி எனப்படும் கர்ப்பிணிப்பெண் அலங்காரத்தில் இம்மாதம் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. குழந்தை வரம் வேண்டி ஏராளமான பக்தர்களுக்கு பரிகார பூஜைகளும் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக செவ்வாய்கிழமை நவராத்திரி நிறைவு நாளையொட்டி மூலவரும், உற்சவரும் பிள்ளைப் பெற்ற பேரரசி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பக்தர்களுக்கு பாலாடையும், அன்னதானமும் பிரசாதமாக வழங்கப்பட்டது. திராளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவின் தலைவர் ஜீவரெத்தினம் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments