பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் தூய்மை பணிகள் - மத்திய அமைச்சர்கள் ஆளுநர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்பு
பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் பங்கேற்றனர்
தூய்மைப் பணியில் மத்திய மந்திரிகள்
சென்னையில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்
புதுடெல்லி, அக்.1-
தூய்மை இந்தியா திட்டத்தின் 9-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இன்று நடைபெற்ற தூய்மைப் பணியில் மத்திய மந்திரிகள், மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். சென்னை கடற்கரைப் பகுதியில் கவர்னர் ஆர்.என்.ரவி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
தூய்மை இந்தியா திட்டம்
2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. அதே ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளன்று ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். அதன் 9-ம் ஆண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக இது குறித்து கடந்த 24-ந் தேதி ஒலிபரப்பான 105-வது `மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
வேண்டுகோள்
“காந்தி ஜெயந்தியன்று நாடு முழுவதும் தூய்மை இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் தூய்மை இயக்கம் வேகம் பெற்றிருக்கிறது. `மனதின் குரல்' வாயிலாக நாட்டு மக்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.1-ந் தேதி (இன்று) காலை 10 மணிக்கு நாடு தழுவிய தூய்மை இயக்கம் நடத்தப்பட உள்ளது. அதற்கு நேரம் ஒதுக்கி, தூய்மை இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறேன்.
உங்கள் தெருவில், அக்கம்பக்கத்தில், பூங்காவில், நதியில், குளத்தில், ஏரியில் அல்லது ஏதாவது ஒரு பொது இடத்தில் நடைபெறும் தூய்மை இயக்கத்தோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். எங்கெல்லாம் அமுத நீர்நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறதோ, அங்கு கண்டிப்பாக தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். இந்த தூய்மை இயக்கமே, காந்தியடிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி" என்று தெரிவித்தார்.
பிரதமரின் இந்த அழைப்பை ஏற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று தூய்மைப் பணிகள் நடைபெற்றன.
பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, உடற்தகுதி நிபுணர் அங்கித் பையான்பூரியாவுடன் இணைந்து இந்த தூய்மைப் பணியில் பங்கேற்றார்.
இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் இடுகையில் ஒரு வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் நமது அன்றாட வாழ்க்கையில் தூய்மை மற்றும் உடற் தகுதியின் முக்கியத்து வத்தைப் பற்றி பேசுவதைக் காணலாம். பிரதமர் தனது அன்றாட வாழ்க்கை வழக்கத்தைப் பற்றியும் பேசினார், மேலும் அங்கித்தின் உடற்தகுதி பற்றி கேட்டார்.
ஒரு எக்ஸ் சமூக ஊடகப் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது:- “தேசம் இன்று, தூய்மையில் கவனம் செலுத்தும்போது, நானும் அங்கித் பையான்பூரியாவும் அதையே மேற்கொண்டோம்! தூய்மையைத் தாண்டி, உடற்தகுதி மற்றும் நல்வாழ்வில் கலந்தோம். இது அனைத்தும் தூய்மை மற்றும் தூய்மை இந்தியாவின் உத்வேகத்தைப் பற்றியது! @baiyanpuria”.”. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
Today, as the nation focuses on Swachhata, Ankit Baiyanpuriya and I did the same! Beyond just cleanliness, we blended fitness and well-being also into the mix. It is all about that Swachh and Swasth Bharat vibe! @baiyanpuria pic.twitter.com/gwn1SgdR2C
— Narendra Modi (@narendramodi) October 1, 2023
மத்திய மந்திரிகள்
இதேபோல், குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்ற தூய்மைப் பணி இயக்கத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, சாலைகளில் கிடைந்த குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினார்.
மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், ஹரியானாவின் குருகிராம் நகரில் தூய்மைப் பணியை மேற்கொண்டார். தூய்மைப் பணியாளர்கள் அணியும் சீருடையை அணிந்து கொண்டு குப்பைகளைப் பெருக்கி வீதியை அவர் சுத்தம் செய்தார்.
![]() |
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் |
6.4 லட்சம் இடங்கள்
இது குறித்து மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி கூறும்போது,
"நாடு முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள நகரங்கள், கிராமங்களில் 6.4 லட்சம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பிரம்மாண்ட திட்டத்தின் கீழ் அதிக குப்பை குவிந்து கிடக்கும் இடங்கள், ரெயில் தண்டவாளங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்கள், நீர்நிலைகள், குளம், நதிக்கரைகள், குடிசை மாற்று வாரியப் பகுதிகள், பாலங்களின் கீழ் பகுதிகள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடிகள், உயிரியல் பூங்காக்கள், கோ சாலைகள், மலை, கடலோரங்கள், துறைமுகங்கள், குடியிருப்புப் பகுதிகள், அங்கன்வாடிகள், பள்ளி, கல்லூரிகள் என பெரும்பாலான இடங்களில் தூய்மைப் பணி நடைபெறும்" என தெரிவித்திருந்தார்.
தமிழக கவர்னர்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை, உத்தண்டி, நயினார்குப்பம் மீனவ கிராம மாணவர்கள், தன்னார்வலர்கள், குடியிருப்புவாசிகளுடன் சேர்ந்து பிரதமர் மோடி தொடங்கிய தேசிய அளவிலான தூய்மை சேவை என்ற சமூகம் முன்னெடுக்கும் தூய்மை பிரசார இயக்கத்தில் பங்கெடுத்தார்.
இதனையடுத்து, கவர்னர் ரவி தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடி, சமூக சுற்றுப்புறத்தை சுகாதாரமாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பதில் அவர்கள் காட்டும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற சேவைகளைப் பாராட்டினார்.
ஆளுநர் ரவி சென்னை, உத்தண்டி, நயினார்குப்பம் மீனவ கிராம மாணவர்கள், தன்னார்வலர்கள், குடியிருப்புவாசிகளுடன் சேர்ந்து, #பிரதமர்மோடி தொடங்கிய தேசிய அளவிலான #தூய்மையேசேவை என்ற சமூகம் முன்னெடுக்கும் தூய்மை பிரசார இயக்கத்தில் பங்கெடுத்தார். (1/2) pic.twitter.com/yDvBlbgL8Q
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 1, 2023
ஆளுநர் ரவி அவர்கள் நயினார்குப்பம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற #தூய்மையேசேவை மாபெரும் தூய்மை இயக்கத்தில் மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்புவாசிகளுடன் இணைந்து பங்கெடுத்த காட்சிகள்.#தூய்மைபாரதம் #குப்பைஇல்லாஇந்தியா #SHS2023 @PMOIndia @HMOIndia @DDPodhigaiTV @pibchennai pic.twitter.com/IiUraHux6S
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 1, 2023
சபாநாயகர்
உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத், சீதாபூர் நகரில் தூய்மைப் பணியை மேற்கொண்டார். அவரோடு இணைந்து ஏராளமானோர் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.
மும்பையில் நடைபெற்ற தூய்மை இயக்கத்தில் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பங்கேற்று குப்பைகளை அகற்றி இடத்தை சுத்தம் செய்தார். மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், டெல்லியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், டெல்லியின் சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியை மேற்கொண்டார். ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் மத்திய மந்திரி பியூஷ் கோயல், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் தூய்மைப் பணிகளை மேற்கொண்டார்கள்.
முப்படைகள் பங்கேற்பு
இந்தப் பணியில் ஈடுபட நகர்ப்புறங்களில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு நலச் சங்கங்கள் முன்வந்துள்ளன. முதல்முறையாக ராணுவம், கப்பல் படை, விமானப் படையினரும் மக்களுடன் ஒன்றிணைகின்றனர்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை :
கோவை அக்ரஹார சாமக்குளத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியில் மாநில பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
கோவை அக்ரஹார சாமக்குளம் ஏரி, சுமார் 160 ஏக்கர் பரப்பளவு உடையது. அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் மூலம் பயன்பெறும் நீர்நிலைகளில் ஒன்றாகும். இந்த ஏரி நீண்ட காலமாக தூர் வாரப்படாமல் உள்ளதால், சுமார் 40 ஏக்கர் அளவுக்கு மண் மூடி, மழை நீர் கொள்ளளவு குறைந்துள்ளது.
— K.Annamalai (@annamalai_k) October 1, 2023
இந்தப் பகுதிகளில்… pic.twitter.com/3DpytL13yL
No comments
Thank you for your comments