தூய்மை சேவை வலியுறுத்தி நடைபயணம்.. மேயர் மகாலட்சுமி யுவராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம்
தூய்மை நாளை முன்னிட்டு தூய்மை சேவை என்பதை அறிவுறுத்தும் விதமாக காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் நடைபயணம் துவக்க நிகழ்ச்சி இன்று காலை மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அறிஞர் அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது.
🔥 கிராம சபை - முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லும் சுவாரஸ்யமான வரலாறும்.. வேண்டுகோளும்..
இதில் மாநகராட்சி ஆணையர், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் தூய்மை உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
அதன் பின்னர் நடைப்பயணத்தை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அண்ணா அரங்கத்தில் இருந்து துவங்கிய இந்த நடைப்பயணம் நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்று மீண்டும் அண்ணா அரங்கத்தை வந்தடைந்து முடிவுற்றது.
நடைப்பயணத்தில் தூய்மை தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகர நல அலுவலர் அருள் நம்பி, மண்டல குழுத் தலைவர்கள் சசிகலா, சந்துரு, மோகன், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், லஷ்மிபரியா, சீனிவாசன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
No comments
Thank you for your comments