காஞ்சிபுரம் மாவட்டம் பூசிவாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அதிகாரங்கள் பறிப்பு
காஞ்சிபுரம் :
![]() |
ஊராட்சி மன்ற தலைவர் லெனின் குமார் |
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் பூசிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று லெனின் குமார் என்பவர் ஊராட்சி மன்ற தலைவர்ராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு தேர்வான துணைத் தலைவர் பூசிவாக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கு கூட ஊராட்சி மன்ற தலைவரின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்காமல் முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளனர்.
இதன் காரணமாக கிராம மக்களின் அடிப்படை தேவைகளை கூட ஊராட்சி மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாமல் ஊராட்சி மன்ற தலைவர் லெனின் குமார் அவதிப்பட்டு வந்துள்ளார்
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்த நிலையில், புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
முழுமையான விசாரணைக்குப் பிறகு ஆறு மாத காலத்திற்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அதிகாரம் பறிக்கப்பட்டு தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments