Breaking News

முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர் -

சென்னை :

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ராஜ்யசபாவிலும், லோக்சபாவிலும் தி.மு.க. எம்.பி.க்கள் பேச எழும்போதெல்லாம் எதிர்வரிசையில் உள்ள ஆளும் பா.ஜ.க.எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் லோக்சபாவில் சந்திரயான் வெற்றி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினர். தி.மு.க. தரப்பில் ஆ.ராசா பேச எழுந்து, "என்னை லோக்சபாவில் பேச அழைத்ததற்கு நன்றி" என்று கூறி உரையை ஆரம்பித்தார். அப்போது, எதிர்வரிசையில் அமர்ந்திருந்த பா.ஜ.க. எம்.பி.க்கள் ராசாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி அவரை பேச விடாமல் செய்தனர்.

அப்போது ஆ.ராசாவுக்கு பின் வரிசையில் அமர்ந்திருந்த தயாநிதி மாறன் எழுந்து பா.ஜ.க. உறுப்பினர்களை நோக்கி தமிழிலேயே காட்டமாக பேசினார்.  எனினும், பா.ஜனதா உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவையை வழிநடத்திக்கொண்டிருந்த மாற்றுத் தலைவர் ராஜேந்திர அகர்வால், பா.ஜ.க. உறுப்பினர்களை நோக்கி அமைதியாக அமருங்கள் என்று கூறி ஆ.ராசாவை தொடர்ந்து பேச அறிவுறுத்தினார். ஆனாலும், தொடர்ந்து கோஷங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. இதனால் தயாநிதி மாறன், காட்டமாக பேசினார். 

இதையடுத்து அவையில் சிறிது நேரம் சலசலப்பு எழுந்தது. இதுதொடர்பான் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், தயாநிதி மாறன் பேச்சுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள பா.ஜ.க. நிர்வாகி நாராயணன் திருப்பதி முன்னாள் மத்திய அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன். பேசியது  புதிய நாடாளுமன்றத்தில். தமிழை, தமிழனை, தமிழகத்தை தலை குனிய வைத்த தி மு க. இந்த நபர் பாராளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர், என்று பதிவிட்டுள்ளார்.

 

No comments

Thank you for your comments