Breaking News

ஒரகடம் பகுதியில் கார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - பாய்லர் டேங்க் வெடித்து விபரீதம்

காஞ்சிபுரம், செப்.22-

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் 4 சக்கர வாகனங்களுக்கு ஸ்டியரிங் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.  இதில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்



இந்நிலையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை உருக்கும் கெமிக்கல் குடோனில் உள்ள பாய்லர் பலத்த சத்ததுடன் திடிரென வெடித்ததால் கரும்புகை விண்ணை முட்டும் அளவுக்கு பரவியது. பலத்த சத்தத்துடன் வெடித்த நிலையில் தொழிலாளர்கள் அனைவரும் தொழிற் சாலையை விட்டு வெளியேறினர்.

கட்டுக்குள் வந்த தீ

தகவல் அறிந்த தொழிற்சாலைகளின் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து வரும் பணியில் ஈடுபட்டனர்

நிகழ்வு இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு படை வீரர்கள் தீயணைப்பு வாகனம் மூலம் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

இந்த விபத்தில் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் சேதம் அடைந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து ஒரகடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் தொழிற்சாலை தீ விபத்தால் ஒரகடம் செங்கல்பட்டு சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

No comments

Thank you for your comments