Breaking News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு

காஞ்சிபுரம்: 

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாநகரில் அண்ணா பிறந்த நாளான இன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடக்க விழாவிற்கு வருகை தந்த தமிழக முதலமைச்சருக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 2 இடங்களில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. 


கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மகளிர்க்கு மாதாந்திர உரிமைத்தொகை வழங்கப்படும் என தி.மு.க. வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

இந்த திட்டத்தை தொடங்கி வைக்க காஞ்சிபுரம் வருகை தந்த தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ராஜகுளம், பொன்னேரிக்கரை ஆகிய 2 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், திமுக மாணவரணி மாநில செயலாளர் வக்கீல் எழிலரசன் எம்எல்ஏ, அவைத்தலைவர் ச.இனியரசு, மாவட்ட துணை செயலாளர்கள் மலர்விழி , டிவி கோகுல கண்ணன், மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், உள்ளிட்ட தெற்கு மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தி.மு.க.வினர் கலந்துகொண்டு வரவேற்பு அளித்தனர். 

இருபுறமும் வாழை மர தோரணங்களுடன், கட்சி கொடிகள் கட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர தி.மு.க. செயலாளர் சி.கே.வி.தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், பி.எம்.பாபு, ஞானசேகரன், சேகரன், குமார், காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி குமார், பேரூர் செயலாளர்கள் பாண்டியன் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பி. சீனிவாசன், சிகாமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், மாநகர அவைத்தலைவர் செங்குட்டுவன், துணைசெயலாளர்கள் முத்துசெல்வம், ஜெகநாதன், நிர்மலா, பொருளாளர் சுப்பராயன், நிர்வாகிகள் மாவட்ட இளைஞரணி யுவராஜ், மாணவரணி ராம்பிரசாத், சுரேஷ்குமார், பகுதி செயலாளர்கள் திலகர், சந்துரு, தசரதன், வெங்கடேசன், மண்டல தலைவர்கள் சாந்தி சீனிவாசன், செவிலிமேடு மோகன், சாந்தி கணேஷ், காஞ்சி டாக்டர் கா.சு.வீரமணி உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் கலந்துகொண்டு வரவேற்பு அளித்தனர்.


 

No comments

Thank you for your comments