கோவில் அருகே கிடந்த தலை.. உடலை தேடி அலைந்த போலீஸ்.. காஞ்சியில் நடந்த கொடூர கொலை...
காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் வெட்டிப் படுகொலை.
- வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்கா வெண்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் இவரது மகன் அஜித் வயது 25.
கூடா நட்பின் காரணமாக போதைப் பழக்கத்திற்கு ஆளாகி பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது வாலாஜாபாத் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் வாலிபர் அஜித்தை மர்ம நபர்கள் சிலர் நேற்று நள்ளிரவு காரில் கடத்திச் சென்று முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளுவப்பாக்கம் கிராம் ரயில்வே பாதை அருகே வைத்து தலை வேறு முண்டம் வேறு வெட்டி கொலை செய்துள்ளனர்.
பின்னர் எந்தவிதமான அச்சமும் இன்றி அஜித்தின் தலையை தாங்கி கிராமத்தில் உள்ள கோவில் அருகே வீசிவிட்டு சென்று உள்ளனர்.
காலை நேரத்தில் அப்படியே சென்றவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஜித்தின் தலையும் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட வாலிபர் அஜித் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா போதையில் ஏகனாம் பேட்டை கிராமத்தில் உள்ள ஓருவரின் வீட்டில் புகுந்து ரகளை செய்த நிலையில் போலீசார் கைது செய்தனர், அவரிடம் நடத்திய விசாரணையில் கொலை வழக்கு ஒன்று குறித்து துப்பு துலங்கியது குறிப்பிடத்தக்கது.
![]() |
உடலை தேடி அலைந்த போலீஸ்..! |
வாலிபர் அஜித் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
No comments
Thank you for your comments