என் செல்ல மகனுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்... என்றும் அம்மா...
என் செல்ல மகன் D.K. சாய் கிருஷ்ணன் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்... என்றும் அம்மா...
![]() |
D.K. சாய் கிருஷ்ணன் |
நீ பிறந்த இந்நன்னாளிலே
உன் உரத்த அழுகையில் மீண்டும்
நான் புதிதாக பிறந்தேன்...!
அம்மா என்கின்ற
அந்தஸ்தை கொடுத்தாய்...!
என் பெண்மையும்
பெருமையடைந்தது..!
உன்னை கையில் ஏந்திஅந்த நிமிடம்
உலகமே என் வசமானதாய் உணர்ந்தேன்..!
உன் மழலை சிரிப்பினில்
என் சோர்வும் மறந்தேன்..!
உன் எச்சில் முத்தத்திற்காக உன்னிடம்
தினம் தினம் மன்றாடியதும் சுகமே..!
என் வாழ்க்கையின்
லட்சியம் நீயே..!
வருடங்கள் உருண்டோடி உன் வயது கூடினாலும்
முதன்முறை பார்த்த அத்த தருணம்
நெஞ்சில் நிறைந்தோடுகிறது..!
நீ குமரனாய் வளர்ந்தாலும்
குழந்தையாகவே உணர்கிறேன்..!
என் உயிரும் நீயே... உயிருள்
நிறைந்திருக்கும் உணர்வும் நீயே..!
கண்களும் நீயே
காணும் காட்சியும் நீயே..!
நான் சுவாசிக்கும் உயிர் மூச்சும் நீயே..!
நான் மறைந்தாலும் உண்ணுள் வாழ்வேன்
உயிரோடும் உணர்வோடும்..!
அனைத்து செல்வம் வளங்களும் பெற்று,
கல்வியில் சிறந்து,
தைரியம் மிகுந்து,
வெற்றி பல கொண்டு
உலகம் போற்ற...
பல்லாண்டு காலம் வாழ...
வாழ்த்துகின்றோம்...
செப். 8ம் தேதி
தேவமாதா பிறந்த நாள்
தேசிய கண் கொடை நாள் (இந்தியா)
அனைத்துலக எழுத்தறிவு நாள்
உலக இயன்முறை மருத்துவ தினம்
பல சிறப்புகளை கொண்ட
இந்நன்னாளிலே நீ பிறந்து மேலும் சிறப்பு சேர்த்தாய்
என் வாழ்க்கையில் முக்கிய தினமாக மாற்றினாய்...
என் செல்ல மகனுக்கு
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்
என்றும் அம்மா...
![]() |
குழைந்தையாய் கணினியில் நீ வரைந்தது |
No comments
Thank you for your comments