Breaking News

விலைவாசி உயர்வை கண்டித்து மறியல் போராட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது...

உத்திரமேரூரில் விலைவாசி உயர்வை கண்டித்து மறியல் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் போலீசார் கைது செய்தனர்.


இந்தியா முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், வேலைவாய்ப்பை அதிகரிக்க கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்  இன்று நாடு தழுவிய மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில்,  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  கட்சி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் நேரு தலைமையிலும், வட்ட செயலாளர் விநாயகமூர்த்தி முன்னிலையிலும், பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர், மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு அம்பேத்கர் சிலை அருகில் இருந்து ஊர்வலமாக  பேருந்து நிலையம் வரை வந்து திடிரென சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் விநாயகம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்தவர்களை கைது செய்து பேருந்தில் ஏற்றி மண்டபத்தில் தங்க வைத்தனர்.

No comments

Thank you for your comments