Breaking News

அரசு திட்டங்கள் அறிந்து கொள்ள இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை... வருத்தம் தெரிவித்த காஞ்சி மாவட்ட கலெக்டர்

இளைஞர்கள் இணையதளத்தில் சினிமா நிகழ்ச்சிகள் அதிக தேடும் ஆர்வம் காட்டும் நிலையில்,  அரசு திட்டங்கள் , வேலை வாய்ப்புகளை தேடுவதில்லை என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வருத்தத்துடன் தெரிவித்தார்.



காஞ்சிபுரம் மாவட்டம் ஊராட்சி சார்பில் , மாவட்ட திட்டக்குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் தலைமையில் நடைபெற்றது . மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் முன்னிலை வகித்தார்.

துணைத் தலைவர் நித்யாசுகுமார், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் மாவட்ட திட்டக் குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் வேளாண்துறை பள்ளி கல்வித்துறை பொதுப்பணித்துறை சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்த தேவைகள் உறுப்பினர்களிடையே கேட்டறியப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் கலைச்செல்வி மோகன், அரசு திட்டங்கள் அறிந்து கொள்ள இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. வேலைவாய்ப்பு தருவதில்லை என்று கூறும் நிலையில் , வாரத்துக்கு இரண்டு நாள் விடுமுறை, அதிகபட்ச சம்பளம் என வட மாநிலத்தவர் சம்பளத்திற்கு வருவதால் அவர்களுக்கு பணி வழங்கப்படுகிறது.

மேலும் வேலை வாய்ப்புகள் குறித்து அறிவிப்புகளை அவர்கள் இணையதளத்தை பார்ப்பதில்லை. இதனால் பணியில் இழக்கும் வாய்ப்பு எழுகிறது என தெரிவித்தார்.

மேலும் கடந்த மூன்று மாதங்களில் நடைபெற்ற மனுநீதி நாள் சிறப்பு முகாமில் பங்கேற்றபோது அதில் ஒவ்வொரு நிகழ்விலும் 300க்கும் ஏற்ற மேற்பட்ட பயனாளிகளுக்கு நல திட்டங்கள் வழங்கிய நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த அரசியல் திட்டங்கள் குறித்த அரங்குகளை சில நபர்களை பார்த்து திட்டங்களை கேட்டு அறிகிறார்கள்.

வீடு தேடி அரசு திட்டங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தினாலும் அதில் பொதுமக்களும் கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது.

இது போன்ற நிலைகளை அனைவரும் தவிர்க்க வேண்டும் எனவும் அனைத்து அரசு திட்டங்களையும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிந்து கொண்டு கிராம வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு திட்ட செயலர் மல்லிகா, திருபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் எஸ்.டி.கருணாநிதி,உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார்,திட்டக்குழு உறுப்பினர்கள் சுதா என்கிற சுப்புராயன்,ராமமூர்த்தி,பால்ராஜ்,சிவராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments