Breaking News

தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் நெசவு பயிற்சி...உடனே விண்ணப்பிக்கலாம்..

கைத்தறி மற்றும் துணிநூல் துறை, இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர  தகுதியுள்ளவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன்  தகவல் தெரிவித்துள்ளார்.



கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மான்யக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் (Young Weavers Induction and Entrepreneurship Programme for Youngsters)  ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசு 04.08.2023-ல் ஆணை வெளியிட்டுள்ளது.

 

இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்.

v  இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு வழங்குதல் (அல்லது) தொழில் முனைவோர்களாக உருவாக்குதல்.


v  பாரம்பரியமான கைத்தறி தொழிலை அதனுடைய பழமை மாறாமல் புத்துயிரூட்டுவது.


v  கிராம புறத்திலுள்ள இளைஞர்களும் கைத்தறி தொழிலை ஒரு தொழிலாக அவர்கள் பகுதியிலேயே ஆரம்பித்தல்.


v  வேலையில்லாத இளைஞர்களுக்கு நெசவுத் தொழில் தொடர்பாக குறுகிய கால பயிற்சி அளித்தல்.

v  2023-24-ல் முதற்கட்டமாக 300 இளைஞர்களை இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்தல்.


v  கைத்தறி நெசவில் நெசவுத் தொழில் நுட்பங்களை பயிற்சியின் வாயிலாக கற்பித்தல்.


v  இப்பயிற்சியின் வாயிலாக கைத்தறி பொருட்களின் உற்பத்தியில் தரத்தையும் அளவையும் மேம்படுத்துதல்.


v  பயிற்சியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு  நாளொன்றுக்கு ரூ.250/- வீதம் பயிற்சி காலம் முடிய ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.


இப்பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான  தகுதிகள்


v  18 முதல் 35 வயது வரை


v  கைத்தறிகளை இயக்குவதற்கு  தகுதி உள்ளவர்களாக  இருக்க வேண்டும்.


v  எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


 

இத்திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.loomworld.in எனும் இணைய தளத்தில் விண்ணப்பங்களை ஆன்லைன்  மூலம் விண்ணப்பம் செய்திட வேண்டும் (அல்லது) இது தொடர்பாக துணை இயக்குநர், கைத்தறி துறை,  எண் 824, கே.எஸ்.பார்த்தசாரதி தெரு, காமாட்சியம்மன் காலனி, காஞ்சிபுரம்- இருந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்குமாறு வேலையில்லாத இளைஞர்/பெண்கள் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


விண்ணப்பம் அளிக்க வேண்டி கடைசி நாள் - 20.9.2023




No comments

Thank you for your comments