சேலத்தில் அமைதி சங்கமம் சார்பில் விழிப்புணர்வு
சேலம்:
சர்வதேச அமைதி தினத்தை ஒட்டி சேலம் அமைதி சங்கமம் சார்பில் நாட்டாண்மை கட்டிட அலுவலகம் முன்பு அமைதி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை சேலம் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் மஞ்சுளா கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாணவிகள் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். இப்பேரணியானது சேலம் நாட்டாண்மை கட்டிட அலுவலகத்திற்கு முன் துவங்கி ஒய்.எம்.சி.ஏ ஹால் வரை நடைபெற்றது. பின் மத நல்லிணக்கம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலம் மறை மாவட்ட டையோசிஸ் மைக்கேல் ராஜ் செல்வம், தமிழக இமாம்கள் பேரவை பைசுல்லா புக்காரி, டாக்டர். கர்லின் எபி,ரோட்டரி கிளப் ஆப் சேலம் ஸ்மார்ட் சிட்டி தலைவர் ராஜா சுந்தர் சிங்,செயலாளர் விஜயமுருகன், பிரம்ம குமாரி, ஜஸ்டின் ராஜ், ராஜகுமாரி உட்பட நிர்வாகிகள் மற்றும் மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments