நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலுக்கு ரிஷப வாகனம் காணிக்கை
காஞ்சிபுரம், செப்.10:
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் உள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் ரிஷப வாகனத்தை ஞாயிற்றுக்கிழமை காணிக்கையாக தந்துள்ளார்.
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமம் அருகே கூழமந்தல் ஏரிக்கரையில் நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய 27 ஸ்தல விருட்சங்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு தினசரி பூஜைகளும் நடந்து வருகின்றன.இக்கோயில் மூலவராக உள்ள விநாயகருக்கு நட்சத்திர விருட்ச விநாயகர் எனப்படுகிறார்.
இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியன்று உற்சவர் நட்சத்திர விருட்ச விநாயகர் ரிஷப வாகனத்தில் செல்வதற்காக புதியதாக செய்யப்பட்ட ரிஷப வாகனம் ஒன்றை காஞ்சிபுரத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் காணிக்கையாக கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார்.
இக்கோயிலில் வரும் செப்.18 ஆம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
No comments
Thank you for your comments