காஞ்சி மாவட்டத்தில் மழை நீர் தேங்கும் பகுதிகளை எம்எல்ஏ எழிலரசன் மற்றும் மேயர் நேரில் ஆய்வு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காற்று திசை மாறுபாடு காரணமாகவும் வானிலை மாற்றம் காரணமாகவும் லேசானது முதல் கனமழை வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வரும் மழை காரணமாகவும், அருகில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் பகுதிகளான வந்தவாசி செய்யார் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வந்த மழை காரணமாகவும் காஞ்சிபுரம் செய்யாறு மற்றும் பாலாறுகளில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 180 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவு பதிவாகியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டாக்டர் பி எஸ் எஸ் சீனிவாசா மேல்நிலைப்பள்ளி மற்றும் அதன் அருகில் உள்ள ராணி அண்ணாதுரை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த தினங்களாக செய்த மழை காரணமாக நீர் தேங்கி பள்ளி மாணவிகளுக்கு பெரும் சிரமத்தை அளித்து வருவதாகவும் மாமன்ற உறுப்பினர் மல்லிகாராமகிருஷ்ணன் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் இதே வளாகத்தில் நீதிமன்றமும் செயல்பட்டு வருவதால் நாள்தோறும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அப்பகுதியில் உலவுவதால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பாதித்து சுகாதார கேள்வி எழும் என சட்டமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் இன்று அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் மற்றும் அதன் வடிகால் குறித்து மாநகராட்சி ஆணையர் கண்ணன் சட்டமன்ற உறுப்பினருக்கு விளக்கினர். பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி உடனடியாக தேங்கியுள்ள நீரை அகற்றவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும் ஆலோசனை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக மாநகராட்சி சார்பில் கழிவு மணல் எடுத்து வரப்பட்டு உடனடியாக கொட்டும் பணியும் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், இந்த பள்ளி வளாகம் சாலையை விட மூன்று மீட்டர் தாழ்வாக உள்ளதால் இதனை சுற்றியுள்ள சாலை மழை நீரில் மொத்தம் இங்கு வருவதால் இப்ப பிரச்சனை ஏற்படுவதாகும் , முதல் கட்டமாக இந்த மைதானப் பகுதியில் மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் செயல்முறையில் செயல்படுத்தப்படும் எனவும் , பருவ மழை காலம் முடிந்த பின் கோடை காலத்தில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது , மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ் , வர்த்தக அணி செயலாளர் ராமகிருஷ்ணன், மண்டல குழு தலைவர் சசிகலா, மண்டல தலைவர்கள் திலகர், வெங்கடேசன் , ஒன்றிய குழு உறுப்பினர் ராம்ப்ரசாத், ஆணையர் கண்ணன் பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments