Breaking News

மேஷம் முதல் மீனம் வரை 20-09-2023 -ம் தேதி ராசி பலன்கள்








 

மேஷம்  :

மனதளவில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலைக் குறைத்துக் கொள்வது நல்லது. பயணம் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அஸ்வினி : நிதானம் வேண்டும். 

பரணி : அனுசரித்துச் செல்லவும். 

கிருத்திகை : விவேகம் வேண்டும். 


ரிஷபம் :

திடீர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் நட்பு வட்டம் விரிவடையும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கவலைகள் குறையும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கிருத்திகை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

ரோகிணி : பொறுமை வேண்டும். 

மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.


மிதுனம்

எதிர்பாராத வரவுகளின் மூலம் சேமிப்பு மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். காப்பீடு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். பணிகளில் திறமைகள் வெளிப்படும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். சிக்கல் அகலும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : சேமிப்பு மேம்படும்.

திருவாதிரை : மாற்றம் ஏற்படும். 

புனர்பூசம் : புரிதல் மேம்படும்.


 

கடகம்  :

செய்யும் செயல்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உறவினர்களின் வருகை உண்டாகும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான சில நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசுப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : மாற்றம் ஏற்படும்.

பூசம் : முடிவுகளை எடுப்பீர்கள். 

ஆயில்யம் : அலைச்சல்கள் ஏற்படும்.



சிம்மம்  : 

சுபகாரிய பணிகளில் விவேகம் வேண்டும். நினைத்த சில பணிகள் தாமதமாக முடியும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். நன்மை நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 1
  • அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : விவேகம் வேண்டும். 

பூரம் : ஆதாயகரமான நாள்.

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.


கன்னி  : 

நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் நிமிர்த்தமான எதிர்ப்புகள் குறையும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எண்ணிய சில பணிகள் நிறைவேறும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை 

உத்திரம் :  மகிழ்ச்சியான நாள்.

அஸ்தம் : எதிர்ப்புகள் குறையும்.

சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.


துலாம்  :

பொருளாதார நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் மேன்மை ஏற்படும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : நெருக்கடிகள் குறையும்.

சுவாதி : குழப்பம் விலகும். 

விசாகம் : ஒத்துழைப்பு உண்டாகும்.


விருச்சிகம்  :

புதிய முயற்சிகளில் மாற்றமான சூழல் அமையும். எதிர்பாராத சிலரின் சந்திப்பு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களில் மேன்மை உண்டாகும். ஆடம்பரமான விஷயங்களைத் தவிர்க்கவும். பணி மாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். மனதளவில் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். பக்தி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 

விசாகம் : மாற்றமான நாள்.

அனுஷம் : மேன்மை உண்டாகும்.

கேட்டை : தன்னம்பிக்கை மேம்படும்.


தனுசு  : 

சகோதரிகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நண்பர்களின் வழியில் புரிதல் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் குறையும். நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்க்கவும். விளையாட்டான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். புதிய தொழில்நுட்ப தேடல் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 9
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 

மூலம் :  தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 

பூராடம் : தடைகள் குறையும். 

உத்திராடம் : தேடல் அதிகரிக்கும். 


மகரம்  : 

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய செய்திகள் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் கைகூடும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தெற்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் 

உத்திராடம் : சுறுசுறுப்பான நாள்.

திருவோணம் : எண்ணங்கள் கைகூடும். 

அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.


கும்பம் :

முயற்சிக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உல்லாச பயணம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மறைமுக திறமைகள் வெளிப்படும். அரசுப் பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். தனம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 

அவிட்டம் : சாதகமான நாள்.

சதயம் : சிந்தனைகள் மேம்படும். 

பூரட்டாதி : இழுபறிகள் குறையும்.


மீனம்  :  

பேச்சுக்களில் கவனம் வேண்டும். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மனதில் இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.

உத்திரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

ரேவதி : மதிப்பு அதிகரிக்கும்.

No comments

Thank you for your comments