பாரத் யாத்திரை முதலாம் ஆண்டு நிறைவு தினத்தையொட்டி மாபெரும் பேரணி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் யாத்திரை முதலாம் ஆண்டு நிறைவு தினம் ஒட்டி காஞ்சிபுரத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் 5 கிலோமீட்டர் தூரம் மாபெரும் பேரணி நடைபெற்றது.
இந்தியா முழுக்க மாவட்ட அளவில் பாரத் ஜோடோ யாத்திரை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையை நாடு முழுக்க துவங்கி இருந்தார்.
இந்த நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையின் முதலாம் ஆண்டு நினைவை குறிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி நாடு முழுக்க மாவட்டம் தோறும் பாரத் ஜோடோ யாத்திரையை நடத்த காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் 100க்கு மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து துவங்கி பேரணி காவலன் கேட், மேட்டு தெரு, மூங்கில் மண்டபம், காந்தி சாலை வழியாக ராஜாஜி மார்க்கெட் காமராஜ் சிலை முன்பு நிறைவு செய்தனர்.
சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாபெரும் பேரணி நடைபயணத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மையர் குமரகுருநாதன், காஞ்சிபுரம் மாநகர தலைவர் நாதன், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments