பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேறியது
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக இன்று (செப். 21) நிறைவேறியது.
மக்களவையில் இரண்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாநிலங்களவையில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கட்ந்த 18ஆம் தேதி ஒப்புதல் அளித்த நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் நேற்று முன்தினம் (செப். 19) மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார்.
மக்களவையில் விவாதம் நடத்தப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதில் இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். மொத்தம் 456 உறுப்பினர்களில் 454 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் மக்களவையில் மசோதா நிறைவேறியது.
அதனைத் தொடர்ந்து மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 11 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. அதன்பிறகு குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக மாநிலங்களவையிலும் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதில் எந்த உறுப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

No comments
Thank you for your comments