காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயில் உண்டியல் திறப்பு - பக்தர்கள் காணிக்கை ரூ.32லட்சம்
காஞ்சிபுரம்,செப்.21:
அத்திவரதர் புகழ் பெற்ற காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் இருந்த 13 உண்டியல்கள் 3 மாதங்களுக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டது.ரொக்கமாக ரூ.32,06,070,தங்கம்}46.300 கிராம்,வெள்ளி 404 கிராம் ஆகியன இருந்தது.
கோயில் பணியாளர்கள் மற்றும் சேவா அமைப்புகளால் கோயில் செயல் அலுவலர் ச.சீனிவாசன் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.உண்டியல் தொகை வங்கியில் வைப்பு நிதியாகவும் வைக்கப்பட்டது.
படவிளக்கம்}காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த தொகையை எண்ணுவதற்காக திறக்கப்பட்ட உண்டியல்

No comments
Thank you for your comments