பேருந்தில் கஞ்சா கடத்திய இரு இளைஞர்கள் கைது... 22 கிலோ கஞ்சா பறிமுதல்
படவிளக்கம் : பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ள வேல்முருகன் மற்றும் சிரஞ்சீவி
காஞ்சிபுரம், செப்.26:
காஞ்சிபுரம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி கோவிந்தராசு, ஆய்வாளர் மகேஷ் ஆகியோர் தலைமையில் திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைச்சாவடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திரமாநிலம் நெல்லூரிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த சொகுசுப்பேருந்தை சோதனையிட்ட போது இரு இளைஞர்கள் சந்தேகப்படும்படி நடந்து கொண்டனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கஞ்சா கடத்தி வருவது தெரிய வந்தது.
இருவரும் காஞ்சிபுரத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தினர்.விசாரணையில் ஒருவர் தூத்துக்குடியை சேர்ந்த வேல்முருகன்(20)திருச்சி அருகே துவாக்குடியை சேர்ந்த சிரஞ்சீவி(24) என்பதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்த 22 கிலோ கஞ்சாவையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
No comments
Thank you for your comments