Breaking News

நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் உண்ணாவிரத அறப்போராட்டம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசு மற்றும் ஆளுநரை கண்டித்து உண்ணாவிரத அறப்போராட்டம் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தலைமையில் துவங்கியது.


தமிழ்நாடு திமுக இளைஞரணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பாக தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும்  ஒன்றிய அரசையும், ஆளுநரை கண்டித்து தமிழக முழுவதும் இன்று உண்ணாவிரத அறப்போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மற்றும் மருத்துவ அணி சார்பில் உண்ணாவிரத அறப்போராட்டம் காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூன் அருகே மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் தலைமையில் துவங்கியது.

இதில் இளைஞரணி மருத்துவ அணி மாணவரணி இளைஞர் அணி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று திருமணமான புதுமண தம்பதிகள் யுவராஜ், வைஷாலி, இருவரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

No comments

Thank you for your comments