கட்சி பாகுபாடு இன்றி உண்ணாவிரதம் போராட்டத்தில் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்..
- கட்சி பாகுபாடு இன்றி நாளை நடக்கும் உண்ணாவிரதம் போராட்டத்தில் மாணவர்களுக்காக கலந்து கொள்ளுங்கள் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுப்பு
- நீட் தேர்வால் இதுவரை 21 மாணவர்களை இழந்துள்ளோம். இதற்கு ஒரே காரணம் மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜக அரசுதான் என காஞ்சிபுரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி. எழிலரசன் ஏற்றப்பட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
+2 பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்க தொகை மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை,மாளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன்,விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வழங்கினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் பேசியதாவது :
எல்லோரும் கற்க வேண்டும் - விளிம்பு நிலை மக்கள் முன்னேற வேண்டுமென தன் வாழ்நாள் எல்லாம் உழைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் பொதுத்தேர்வில் அதிகமதிப்பெண் பெற்ற 60 பள்ளி மாணவர் - மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை - ஆட்டோ ஓட்டும் சகோதரர்கள் 700 பேருக்கு சீருடைகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மண்ணில் இன்று வழங்கினோம்.
முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் நம் மாணவர்களின் கல்வி உரிமை காக்கவும் - மக்கள் நலன் பேணவும் அயராது உழைப்போம்!
"கட்சி பாகுபாடு இன்றி நாளை நடக்கும் உண்ணாவிரதம் போராட்டத்தில் மாணவர்களுக்காக கலந்து கொள்ளுங்கள் " உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்.
நீட் தேர்வால் இதுவரை 21 மாணவர்களை இழந்துள்ளோம்.
இதற்கு ஒரே காரணம் மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜக அரசுதான்.
நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கண்டனம் தெரிவித்து, திமுகவின் இளைஞர் அணி மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணியிலிருந்து நாளை தமிழ்நாடு முழுவதும் இருக்கும் மாவட்டங்களிலும் உண்ணாவிரத அறப்போர் போராட்டத்தை அறிவித்திருக்கிறோம்.
கட்சி பாகுபாடு இன்றி மாணவர்களுக்காக மாணவர்களின் பெற்றோர்களுக்காகவும், அறப்போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
No comments
Thank you for your comments