பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
சென்னை வியாசர்பாடி M.K.B நகரில் அமைந்திருக்க கூடிய தனியார் திருமண மண்டபத்தில் பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு வியாசர்பாடி பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசளிப்பு விழா மற்றும் சென்ற ஆண்டு சிறப்பாக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கல்விக்கு சேவை செய்து வரும் பல்வேறு நல் உள்ளங்களுக்கு பாராட்டு வழங்கும் விழா 30-07-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது
இதில் சிறப்பு விருந்தினர்களாக விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு A.M.V.பிரபாகரன் ராஜா.MLA அவர்களுக அவர்கள் மற்றும் மேன் ஆஃப் மில்லினியம் பாலம் கல்யாணசுந்தரனார் ஐயா மேலும் சுதந்திரப் போராட்ட தியாகி குருமூர்த்தி ஐயா மற்றும் அப்துல் கலாம் கனவு அறக்கட்டளை நிறுவனர் கல்வியாளர் S.உதயகுமார்.M.E அவர்கள் மற்றும் சிலம்பக்கலை பயிற்றுனர்.
ரவி ஜி அவர்கள் சிரிப்பு யோகா சிரிப்பானந்தா அவர்கள் மற்றும் சிவலோக திருமண அறக்கட்டளையின் இயக்குனர் புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
No comments
Thank you for your comments