Breaking News

வாலாஜாபாத் கூட்டு சாலையில் அவளூர் மக்கள் திடீர் சாலை மறியல்

  • காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் கூட்டு சாலையில் அவளூர் மக்கள், பாமக-வினர் என 300-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல்
  • பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்த ஆசூர் பகுதியை சேர்ந்த இளைஞர்களை அவளூர் பகுதியை சேர்ந்தவர்கள் தர்ம அடி கொடுத்த விவகாரம் தொடர்பாக 7பேர் கைது
  • அவளூர் மக்கள் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி வாலாஜாபாத் கூட்டு சாலையில் அவளூர் கிராம மக்கள்,  பாமக-வினர் என சுமார் 300க்கும் சாலை மறியல்
  • சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு



காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அவளூர் ஊராட்சியிலுள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் அதே ஊரான ஆசூரையே சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பள்ளியை விட்டு அவளூரில் பேருந்திற்காக காத்திருக்கும் மாணவிகளிடம் அவ்வப்போது கேலியும்,கிண்டலுமாகவும் ஆபாசுமாகவும் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேருந்திற்காக காந்திருந்த மாணவிகள் கத்தி கூச்சலிட்டவாறு நின்ற நிலையில் அருகாமையிலிருந்த அவளூர் பகுதியை சேர்ந்த பெண்கள் அந்த மாணவிகளை இங்கு நிற்க வேண்டாம் என கூறயதாக கூறப்படுகிறது. இதனால் அத்திரமடைந்த அந்த பள்ளி மாணவிகள் இந்த இளைஞர்களிடம் கூற அங்கு பயங்கர மது போதையில் கையில் சரக்கு பாட்டிலுடன் சுழற்றி கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த விஷால் மற்றும் சுந்தர் அவளூர் கிராம பெண்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி இந்த ஊரில் ஆம்பளைங்க யாரும் இல்லை பேசியுள்ளனர்.

இதனால் அத்திரமடைந்த பெண்கள் அந்த மாணவிகளையும், இளைஞர்களையும் சூழ்ந்த நிலையில் அங்கிருந்த ஒருவர் அந்த இளைஞர்களை தட்டிகேட்க அவரை இளைஞர்கள் தாக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மேலும் அங்கிருந்த ஒருவரையும் தாக்கியிருக்கின்றனர். இந்த நிலையில் இதனை அறிந்த அந்த ஊரை சேர்ந்தவர்கள் அந்த இரண்டு இளைஞர்களையும் தர்ம அடி கொடுத்து சராமரிமாக தாக்கியிருக்கின்றனர். இதனையெடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரண்டு இளைஞர்களையும் மீட்டு வீட்டிற்கு அனுப்பிய நிலையில் இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமைனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும் சம்பவத்தன்றே அவளூரை சேர்ந்த குணசேகரன் என்பவரின் வைக்கோல் போர் மர்ம நபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டது.இதற்கு ஆசூரை சேர்ந்தவர்களே காரணம் என அவளூர் கிராம மக்கள் கூறுகின்றனர்.

இதனை அவளூரை‌ சேர்ந்த ஒரு சிறுவனே வீடியோ எடுத்த நிலையில் ஆசூரை சேர்ந்தவர்கள் இந்த வீடியோ காட்சிகளை வாங்கி சமூக வளைதளங்களில் பரப்பிய நிலையில் பட்டியலினத்தை சேர்ந்த இந்த இரண்டு இளைஞர்களை விடுதலை சிறுந்தைகள் கட்சியினர் வந்து சந்திந்து சென்ற நிலையில் மாற்று சமூத்தினரான (வன்னியர்கள்) அவளூர் ஊர் பக்கம் பாட்டாளி மக்கள் கட்சியினரும் கைகோர்த்திருக்கின்றனர்.இதனால் இந்த பிரச்சனை சாதிய ரீதியான பிரச்சனையாக உருவெடுக்கிறது.

இதனையெடுத்து இரவோடு இரவாக அவளூரை சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட 7பேரை மாகரல் போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்ற நிலையில் விஷயம் இன்னும் பூதாகரமாக வெடித்துள்ளது.

இதனையெடுத்து ஆசாதரணமான சூழல் நிலவா வண்ணம் இரண்டு கிராம மக்களிடையே காவல்துறை மற்றும் வருவாய் துறை தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி பீஸ் கமிட்டி மீட்டிங்கானது செவ்வாய்க்கிழமை காலை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அவளூரை சேர்ந்த 7பேரையும் சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால் கொந்தளித்த அவளூர் மக்கள் பாட்டாளி மக்கள் கட்சியினரோடு கைகோர்த்து சாதிய ரீதியாக புணையப்பட்டு வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து வாலாஜாபாத்-காஞ்சிபுரம் சாலையில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சாலை மறியல் போராட்டத்தினால் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாநில நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிப்பானது ஏற்பட்டது.இதனையெடுத்து போலீசார் எதிர்ப்பு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சட்டரீதியான நடவடிக்கை அவர்கள் மீது பாயும் என உறுதியளித்ததை தொடர்ந்து களைந்து சென்றனர்.

தீடிரென சாதிய ரீதியான கிளம்பி நடைபெற்ற இந்த சாலை மறியலால் அச்சாலையில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Thank you for your comments