Breaking News

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டதிற்கான விண்ணப்பம் பதிவு செய்யும் இரண்டாம் கட்ட முகாம்-ஆட்சியர் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பம் பதிவு செய்யும் இரண்டாம் கட்ட முகாம்கள் நடைபெறும் இடங்களில்  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பம் பதிவு செய்யும் இரண்டாம் கட்ட முகாம்கள் நடைபெறும்  இன்று (08.08.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கலைஞர் உரிமைத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டதில் பயன் பெற விண்ணப்பம் பதிவு முகாம்கள் இரண்டு கட்டமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட முகாம்கள்  24.07.2023 முதல் 04.08.2023 வரையிலும் நடைபெற்று முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட முகாம்கள் 05.08.2023 முதல் 16.08.2023 வரையிலும் நடைபெற்று வருகிறது. இம்முகாம்கள் காலை 9.30 மணி முதல் 1.00  மணி வரையிலும், பிற்பகல் 2.00 மணி முதல் 5.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை அரசு ஆதிதிராவிட நல ஆரம்ப பள்ளியில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமினையும், பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெற்று வரும் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்து, முகாம்களில் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், இணையதளம், கழிப்பறை, பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டார்கள்.

இதனை தொடர்ந்து பெரியார் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்டு, பொருட்கள் இருப்பு நிலவரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்கள்.

இவ் ஆய்வின் போது   காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் திரு.க.கண்ணன், குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் திருமதி.இந்துமதி ஆகியோர் உள்ளனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments