Breaking News

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 34-வது மாபெரும் இரத்ததான முகாம் 🩸

காஞ்சிபுரம் :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) காஞ்சிபுரம் கிளை மற்றும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையும் இணைந்து  34-வது  மாபெரும் இரத்ததான முகாம் 🩸 நடைபெற்றது.


இறைவனின் மாபெரும் கிருபையினால் 06.08.2022 ஞாயிறு அன்று ஒலிமுஹம்மதுபேட்டை தவ்ஹீத் பள்ளிவாசலில்  இரத்த பற்றாக்குறை காரணமாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் சார்பாக விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உரிய நேரத்தில்  100 க்கும் மேற்பட்ட ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு சாதி மத பேதமின்றி இரத்ததானம் வழங்கி மனித உயிர் காக்க தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

மேலும் இரத்தகொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அன்சாரி- TNTJ காஞ்சி மாவட்ட செயலாளர்  மற்றும் சர்புதீன்- மாவட்ட மருத்துவ அணி  முன்னிலை வகித்தனர்.

தலைமை: கிளை தலைவர்: முஜிபுர்ரஹ்மான், செயலாளர்: அப்துல்லாஹ், பொருளாளர்: ஃபாசில்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரத்த வங்கி அலுவலர்- தாமரை நங்கை  TNTJ காஞ்சிபுரம் கிளை சார்பாக அரசு மருத்தவமனைகளுடன்இணைந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததான முகாம் நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ), காஞ்சிபுரம் கிளை, காஞ்சிபுரம் மாவட்டம்.

தொடர்புக்கு:  9498010595 / 695 / 795 ,  8925120326




No comments

Thank you for your comments