30 ஆண்டு ஆடி திருவிழா... அம்மன் வீதி உலா..
காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 30 ஆண்டு ஆடி திருவிழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்ததது.
காஞ்சிபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பல்லவன் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் 30 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா விமர்சையாக நடைபெற்றது
இதில் காலை முதல் அம்மன் கரகம் வர்ணித்தல் ஜலம் திருட்டுதல் உள்ளிட்ட சிறப்பு ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்று மாலை மூலவர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது
இதனை தொடர்ந்து உற்சவர் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா சிறப்பாக நடைபெற்றது தொடர்ந்து ரோஜா நாடக மன்றத்தினால் சிறப்பு நாடகமும் நடைபெற்றது
விழாவில் அம்மன் உற்சவ சாத்துபடி புஷ்ப அலங்காரத்தினை சந்திரன் டிராவல்ஸ் சரவணகுமார் புண்ணியகோடி கிருஷ்ண பிரசாத். தரும் பிரசாத் ஆகியோர் சிறப்பாக செய்தனர் நாடகத்தினை ஆறுமுகம் கிருஷ்ணவேணி அன்பழகன் சரோஜா ஆகியோர் சிறப்பாக சேர்ந்தனர்
மூன்று நாட்களுக்கு அம்மன் கரகம் புஷ்ப அலங்காரம் மற்றும் மாரியம்மன் துர்கை அலங்காரம் ஆகியவற்றினை லட்சுமணன் கலாவதி குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
வீதி உலா வந்த அம்மனுக்கு பக்தர்கள் நெய்வேத்தியம் மற்றும் தீபாரதனைகள் சமர்ப்பித்து வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் வி ஆர் பிரபு ஐயர் மற்றும் திருக்கோயில் நிர்வாக குழுவினர் பொதுமக்கள் ஆகியோர் இனத்து சிறப்பாக செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments