Breaking News

சிவகார்த்திகேயனின் "மாவீரன்" வரும் 11ம் தேதி பிரைம்-ல் ரிலீஸ்

சென்னை: 

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் வரும் 11ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். 

விது அய்யனார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் கடந்த மாதம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக வெளியானது.

இப்படம் உலகம் முழுவதும் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். 

இந்த நிலையில், ‘மாவீரன்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் 11ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

No comments

Thank you for your comments