Breaking News

தங்கையை சீரழித்தாக கணவின் மீது மனைவி புகார் - போக்சோ சட்டத்தின் கீழ் கைது

காஞ்சிபுரத்தில் பல ஆண்டுகளாக உடன் தங்கியிருந்த தங்கையை சீரழித்தாக  கணவின் மீது மனைவி புகார் தெரிவித்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியில் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து  வருபவர் விவேகானந்தன்(52) . 

இந்நிலையில் ஓரிக்கை அரசு நகர் பகுதியை சேர்ந்த சாரா டெய்சி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவருக்கும் பிறந்த இரண்டு குழந்தைகளுடன் தொடர்பில் (living to Gether) இருந்துள்ளார்.



கடன் செயலி (LOAN APP) மோசடி 

இவர்களுடன் டெய்சி ராணியின் தங்கை தங்கியிருந்து பள்ளி படிப்பை படித்து வந்த நிலையில் விவேகானந்தன் டெய்சி இல்லாத நேரத்தில் அவரது அவரது தங்கையுடன் நட்பில் பல ஆண்டுகளாக யாரிடம் கூற வேண்டாம் எனக் கூறி இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் விவேகானந்தர் மற்றும் சாராடெய்சி தங்கை ஒன்றாக இருக்கும் நிலையை கண்டு தன்னை மட்டுமில்லாது தன் தங்கையையும் சீரழித்த கனவின் மீது காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சித்ரா தேவியிடம் புகார் தெரிவித்தார்.

புகாரினை பெற்ற சார் ஆய்வாளர் காயத்திரி விசாரணை மேற்கொண்டதில் அந்தப் பெண்,  இளம் வயது பெண் என தெரியவந்தது, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஒரே நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் மூன்று பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நபரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

No comments

Thank you for your comments