Breaking News

ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சத் சங்கம் டிரஸ்ட் சார்பில் ஆனி அனுஷ மஹோத்ஸவமும், குரு பூர்ணிமா வைபவம்

சென்னை, மேற்கு சைதாப்பேட்டை பார்சன் நகரில் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சத் சங்கம் டிரஸ்ட் சார்பில் ஆனி அனுஷ மஹோத்ஸவமும், குரு பூர்ணிமா வைபவங்களும் சிறப்பாக நடந்தேறியது. 


காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும் தொடர்ந்து ஸ்ரீ மகா பெரியவா  ஜென்ம நட்சத்திர தினத்தை முன்னிட்டு நவக்கிரக, ஆவஹந்தி, ஆயுஷ்ய,  நட்சத்திர, நவக்கிரக ஹோமங்கள் நடைபெற்றன.  

சிறப்பு ஹோமங்கள் வரிசையில் ஜூலை மூன்றாம் தேதி அன்று வரும் வியாஸ பூர்ணிமாவை முன்னிட்டு மேதா தட்சிணாமூர்த்தி ஹோமமும், வேத வியாஸ ஹோமமும் நடைபெற்றது.  

இத்துடன் உலக நன்மையை முன்னிட்டு நோய்கள் அண்டாமல் இருக்க ம்ருத்யஞ்ய ஹோமமும், மழை வேண்டி வாருண ஹோமமும், இன்று வரும் சனி பிரதோஷத்தை கருத்தில் கொண்டு  சிவ பஞ்சாட்சரி ஹோமமும் நடைபெற்றது.  பூஜை ஹோமங்களை மேற்கு மாம்பலம் ஸ்ரீ பாலாஜி சாஸ்திரிகள் சிறப்பாக செய்தனர்.



கடன் செயலி (LOAN APP) மோசடி 
டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

நிறைவாக ஸ்ரீ மகா பெரியவா உத்ஸவ திருமேனிக்கு பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் பெரியவா அஷ்டோத்ர சத நாமாவளி அர்ச்சனையும், தோடகாஷ்டத்துடன் மகா தீபாராதனையும் செய்விக்கப்பட்டது. 

 வந்திருந்த பக்தர்களுக்கு அனுஷ ஹோம ஹோம பிரசாதமும், அன்ன பிரசாதங்களும் வழங்கப்பட்டது. ஆன்லைன் மூலமாக சங்கல்பித்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய படி ஹோம சங்கல்பம் செய்யப்பட்டது.  சங்கல்பத்தீல் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் ஓரிரு நாட்களில் அனுப்பப்படுகிறது.

சத் சங்கம் டிரஸ்ட் அன்பர்கள் ஏற்பாடுகளை  எந்த குறையும் இல்லாமல் சிறப்பாக செய்திருந்தார்கள்.

அடுத்த அனுஷ பூஜை நாள் 28.07.2023 வெள்ளிக்கிழமையன்று நடைபெறவுள்ளதாக டிரஸ்ட் ராமன் வெங்கட் தெரிவித்தார்

No comments

Thank you for your comments