Breaking News

விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களுக்கு அபராதம்

காஞ்சிபுரத்தில் விதிமுறைகளை மீறி அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றி கொண்டு பயணித்த ஆட்டோக்களுக்கு  வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அபராதம் விதித்தார்.


காஞ்சிபுரம் மாநகரில் நாளுக்கு நாள் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் பெருக்கத்தினால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் வரையறையின்றி ஆட்டோ ஓட்டுநர்களும்,ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களும் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்ற போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றனர். மேலும் இதனால் ஒரு சில நேரத்தில் விபத்துகளும் நிகழ்கிறது.

அதே போல் ஷேர் ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றி கொண்டு பயணிப்பதும்,அதிக சத்தத்துடன் பாடல்களை கேட்ட வண்ணமும், இரவு நேரங்களில் வண்ண வண்ண மின்விளக்குகள், எல்இடி லைட்டுகளை ஒளிரவிட்டபடியும் செல்லவதினால் விபத்துகள் நிகழ்வதும் வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது.



கடன் செயலி (LOAN APP) மோசடி 
டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

இவ்வாறு காஞ்சிபுரத்தில் விதிமுறைகளை மீறி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக வந்த தொடர் புகார்களையெடுத்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் உத்தரவின் பெயரில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் காஞ்சிபுரம் மாநகரில் ஒலிமுகமதுபேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.


இந்தியாவிலேயே முதன்முறையாக TEALS திட்டம்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி


அப்போது அவ்வழியே வந்த ஆட்டோக்களை போலீசார் உதவியோடு மடக்கி ஆவணங்களை ஆய்வு செய்தார்.மேலும் விதிமுறை மீறி அதிக அளவு எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றி கொண்டு பயணித்த மற்றும் வெள்ளை நிறம் ஒலி தரக்கூடிய எல்இடி மின்விளக்குகள், வண்ண வண்ண மின்விளக்குகள் பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களின் லைட்களை அதன் ஓட்டுநர்களை கொண்டை உடைக்க வைத்தும் அதிக சத்தம் எழுப்பிக் கூடிய ஆர்ன் இணைப்புகளை துண்டிக்க வைத்தும் அபராதம் விதிக்கப்பட்டது.

No comments

Thank you for your comments