மலிவு விலை தக்காளி விற்பனை - வரிசையில் நின்று வாங்கிச் செல்லும் பொதுமக்கள்
- காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவு துறை சார்பில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் ஜோராக நடைபெறும் மலிவு விலை தக்காளி விற்பனை.
- வரிசையில் நின்று போட்டி போட்டு வாங்கிச் செல்லும் பொதுமக்கள்.
தமிழகம் முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ஒன்று 100 ரூபாய் முதல் நூற்று இருபது ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.
இந்தியாவிலேயே முதன்முறையாக TEALS திட்டம்அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு கூட்டுறவுத் துறை சார்பில் தக்காளி உற்பத்தி செய்யும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து லாப நோக்கம் இல்லாமல் ஒரு கிலோ தக்காளியை 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் மலிவு விலை தக்காளி விற்பனை கடந்த சில நாட்களுக்கு முன்பு துவக்கி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கூட்டுறவுத் துறை சார்பில் நியாய விலைக் கடைகளில் மட்டும் அல்லாது மினி லாரிகள் மூலம் ஆங்காங்கே மலிவு விலை தக்காளி விற்பனை துவக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் கூட்டுறவு துறை மினி லாரியில் வைத்து மலிவு விலை தக்காளி விற்பனை இரவு நேரத்திலும் ஜோராக நடைபெற்றது.
கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து போட்டி போட்டுக் கொண்டு மலிவு விலை தக்காளியை வாங்கிச் சென்றனர்.
No comments
Thank you for your comments