காஞ்சிபுரம் பட்டு பூங்காவில் கோ.ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் உற்பத்திக் கூடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா
காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்ப்பூரில் பட்டுப் பூங்கா உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் 10 க்கும் மேற்பட்ட பட்டு உற்பத்தி தொழில் முனைவோர்கள் பட்டு சேலைகளை உற்பத்தி செய்வதற்காக தறிக் கூடங்களை அமைத்து தரமான பட்டு சேலைகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இங்கு தமிழக அரசின் கோ.ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில் புதிதாக கைத்தறி உற்பத்தி தொழில் கூட கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஆர் காந்தி அடிக்கல் நாட்டினார்.
இவ்விழாவிற்கு கைத்தறி துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், ஆணையாளர் கே. விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எம்பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், பட்டுப் பூங்காவின் இயக்குனர் பி. ராமநாதன், தொழிலதிபர்கள் சந்தானகிருஷ்ணன் நெசவாளர் சேவை மைய உதவி இயக்குனர் சசிகலா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments