Breaking News

மாநகராட்சி மாதாந்திர கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் திடீர் தர்ணா போராட்டம்

காஞ்சிபுரம்  :

  • காஞ்சிபுரம் மாநகராட்சி மாதாந்திர  கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் மாமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து மேயர் வருவதற்கு மிகவும் காலதாமதம் ஆனதால் மேயர் இருக்கை முன் திடீர் தர்ணா போராட்டம்...!
  • ஆளும் கட்சி மாமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களும் மாறி மாறி கோஷமிட்டு, கூச்சலிட்டத்தால் பெரும் பரபரப்பு...!
  • பெண் மாமன்ற உறுப்பினர்கள் உள்ள மாநகராட்சி குழுவில் மணிப்பூர் ஆபாச சம்பவ காட்சிகளை பதிவிட்ட மாமன்ற உறுப்பினரை சராமரியாக திட்டிய எதிர்கட்சி பெண் மாமன்ற உறுப்பினர்கள்
  • கூட்டத்தை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூறிய போது கிளம்புங்க என்று மேயர் ஒருமையில் கூறியதால்,கோபப்பட்டு கூச்சலிட்டும்,மேயரை முற்றுகையிட்டு பின் கூட்டத்தை புறக்கணித்து எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு...!


காஞ்சிபுரம் மாநகராட்சியிலுள்ள  கூட்டரங்கில் மாதந்தோறும்  மாதாந்திர கூட்டம் நடைபெற்று, மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுகளுக்கு தேவையான முக்கிய அடிப்படை வசதிகளை கோரிக்கையாக வைத்து அதன் அடிப்படையில் தீர்மானமாக நிறைவேற்றி அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆனால் எதிர்கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களின் வார்டுகளில் சொற்ப அளவிலான பணிகளே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 35 மாமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியான திமுகவினரும், மீதமுள்ள 16 மாமன்ற உறுப்பினர்கள் அதிமுக,பாஜக,பாமக, தாமக உள்ளிட எதிர்க்கட்சியினராகவும் உள்ளனர்.


இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 16 மாமன்ற உறுப்பினர்கள், அவர்களின் வார்டுகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை, கருப்பு சேலையில் வந்து கண்களில் கருப்பு துணியை கட்டியவாறு கூட்டத்திற்கு வருகை புரிந்தனர்.

மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் 10.15 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 10.45 வரை மாமன்ற கூட்டம் தொடங்காததால் எதிர்க்கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மேயர் இருக்கை முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.


மேலும் எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர்களின் செயலை கண்டித்து ஆளும் கட்சியான  திமுகவை சேர்ந்த திமுக மாமன்ற உறுப்பினர்களும் எதிர்கோஷம் போட்டும்,ஆளும் கட்சி,எதிர்க்கட்சி என இரு தரப்பு மாமன்ற உறுப்பினர்களும் மாறி மாறி கோஷமிட்டு,கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பின் காலதாமதாக மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் சபைக்கு வந்ததும், எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்த போது, சற்று என்று மேயர் கிளம்புகள் என ஒருமைகில் பேசியதால் எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் மேயரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் நீண்ட நேரமாக மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து கூட்டத்தை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துவிட்டு மாநகராட்சிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு வெளி நடப்பு செய்து, மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

இதனையடுத்து எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் மாமன்ற கூட்டம் நடைபெற்றது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

மாமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் மாமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டதால் மாமன்ற கூட்டரங்கு வெளியே பத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில்  ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments