Breaking News

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக முதன்மை பயிற்சி வகுப்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான முதன்மை பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்டம், குடும்பத்தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிளான முதன்மை பயிற்சியாளர்கள் (DLMT-District Level Master Trainers), 27 தன்னார்வலர்கள் (ITK-இல்லம் தேடி கல்வி) மற்றும் 5 ஒருங்கிணைப்பாளர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று (10.07.2023) பயிற்சி வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடந்த இந்த பயிற்சி கூட்டத்தில் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்பங்களை எவ்வாறு கைப்பேசி செயலி மூலம் பதிவேற்றம் செய்வது தொடர்பாக, செயல்முறை விளக்கம் வழங்கப்பட்டது. 



கடன் செயலி (LOAN APP) மோசடி 

மேலும் முகாம் நடைபெறும் நாளன்று, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களுடன், கொண்டுவர வேண்டிய ஆவணங்களான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக்கணக்குப் புத்தகம், மின்சார வாரிய கட்டண இரசீது மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றை அசலாக சரிபார்த்து விண்ணப்பங்களை கைப்பேசி செயலி வழியே பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. 

மேலும் வருகிற 12.07.2023 அன்று வட்டார அளவில் தன்னார்வலர்களுக்கு, மாவட்ட அளவிளான முதன்மை பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

தன்னார்வலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள முகாம் இடத்திற்கு ஒரு நாள் முன்னதாக சென்று அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை உறுதி செய்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) திரு.பாபு, மாநில அளவிலான முதன்மை பயிற்சியாளர்கள், திரு.ஜெயகாந்தன், வட்டாட்சியர், திரு.அண்ணல் அரசு, ஒருங்கிணைப்பாளர் (ITK-இல்லம் தேடி கல்வி) ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments