Breaking News

லாரி சக்கரத்தில் சிக்கிய குழந்தை மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவம்... வாகனத்தை மறித்து பொதுமக்கள் சாலை மறியல்


காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் மிலிட்டரி ரோடு அருகே தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 5000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயில்வதால் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இரு சக்கர வாகனம் உள்ளிட்டவைகளை அழைத்து வந்து பள்ளியில் விடுவது வழக்கம்.



கடன் செயலி (LOAN APP) மோசடி 

இந்நிலையில் இதே சாலையில் சென்னைக்கு கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் கனராக லாரிகள் நூற்றுக்கணக்கானவை இந்நேரத்தில் செல்வதால் விபத்து அபாயம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் கடந்த சில தினங்களாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சதாவரத்தை சேர்ந்த நாராயணமூர்த்தி என்பவர் தனது பேத்தி யஸ்விகாவுடன் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வரும்போது பள்ளி வளாகம் அருகே கனரக லாரியில் பின் டயரில் சிக்கி மயிரிழையில் இருவரும் சிராய்ப்புகளுடன் உயிர் தப்பினார்.

இதைக் கண்ட பொதுமக்கள் பெருத்த அதிர்ச்சி மற்றும் கோபமடைந்து காஞ்சிபுரம் உத்தரமேரூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்று இருந்தது.

காஞ்சிபுரம் தாலுகா காவல் ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலை மறியல் கைவிடப்பட்டு இனி பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் இவ்வழியாக வராது என வாய்மொழி உத்தரவு அளித்தும் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் இடம் இதுகுறித்து மனு அளிக்கவும் அறிவுறுத்தினர்.

தொடர்ச்சியாக இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதும் இதற்கான மாற்று பாதையை காவல்துறை ஏற்படுத்தாது காலம் தாழ்த்தி வருவதாகவும் , இதனால் நாள்தோறும் வாகன விபத்துக்கள் நடைபெறுவதாக கடும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்

No comments

Thank you for your comments