Breaking News

நெடுஞ்சாலை துறையின் சார்பில், நடைபெற்று வரும் பணிகள் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையின் சார்பில், நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு  மேற்கொண்டார்கள்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையின் சார்பில், நடைபெற்று வரும் பணிகளை இன்று (14.07.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு  மேற்கொண்டார்கள்.



கடன் செயலி (LOAN APP) மோசடி 

காஞ்சிபுரம் மாவட்டத்தில்,  காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் வெங்கச்சேரியில் செய்யாற்றின் குறுக்கே ரூ.22.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணியினையும், மாகரல் காவந்தண்டலம் பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில்  செய்யாற்றின் கரை பலப்படுத்தப்பட்ட பணியினையும், வாலாஜாபாத் – அவÙர் சாலையில் பாலாற்றின் குறுக்கே ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் தரைப்பாலம் சீரமைக்கும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.

மேலும், சென்னை – கன்னியாகுமரி தொழிற்தட திட்டம் மூலம் ரூ.448 கோடி மதிப்பில் காஞ்சிபுரம் – செங்கல்பட்டு வரை இருவழிச்சாலை மற்றும் வாலாஜாபாத் புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இப்பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.

இவ் ஆய்வின் போது சென்னை – கன்னியாகுமரி தொழிற்தட திட்ட கோட்ட பொறியாளர் திரு.லட்சுமிநாதன், உதவி கோட்ட பொறியாளர் திரு.முகுந்தன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் திரு. பெரியண்ணன் மற்றும் பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments

Thank you for your comments