கார் ஓட்டுனருக்கும் பைக்கில் வந்தவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு - ஒருவர் பலி
- காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் ஓட்டுனருக்கும் பைக்கில் வந்தவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு.
- பைக்கில் வந்த இளைஞர்களை காரை கொண்டு தட்டி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி மேலும் ஒருவர் படுகாயங்களுடன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
- சுங்குவார்சத்திரம் போலீசார் காரை ஓட்டுனரை கைது செய்துள்ள நிலையில் கொலை வழக்குபதிவு செய்ய கோரி உறவினர்கள் காவல்நிலையம் முற்றுகை
- பைக்கில் சென்ற இளைஞர்களை காரை கொண்டு பைக்கின் பக்கவாட்டு பகுதியில் இடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மொளச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஷ்ணு (24), ஏழுமலை (30). இருவரும் அதே பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார்.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி வாங்க சுங்குவார்சத்திரம் இருவரும் சென்றுள்ளார்.
அப்போது விஷ்ணு ஓட்டி சென்ற பைக்குக்கு முன்பாக சென்ற கார் ஒன்று இன்டிகேட்டர் எதுவும் போடாமல் திடீரென வளைவில் திரும்பி உள்ளது. இதன் காரணமாக விஷ்ணுவுக்கும் ,காரை ஓட்டி வந்த திருவள்ளூர் மாவட்டம் பண்ணூரை சேர்த்த பங்கிராஜ் (62) ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து காரில் சென்றபடியே அப்படி தான் ஓட்டுவேன் என அதிகார தோணியில் பேசியபடியே பங்கிராஜ் காரை ஓட்டி சென்ற நிலையில் இருசக்கர வாகனத்தில் விஷ்ணு தனது நண்பர் ஏழுமலையுடன் சென்றபடியே கேட்டு வாக்குவாதம் செய்தபடியே சென்றிருக்கிறார்கள்.
இதனால் ஆத்திரமுற்ற பங்கிராஜ் சோகண்டி அருகே பாங்கிராஜ் காரை அதிவேகத்தில் ஓட்டி விஷ்ணு சென்ற பைக்கின் பக்கவாட்டு பகுதியில் இடித்து தள்ளி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றார். இந்த விபத்தில் விஷ்ணு, ஏழுமலை ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்த மக்கள் சிலர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஷ்ணு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். ஏழுமலைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து வந்த விஷ்ணுவின் மனைவி பிரேமா மற்றும் உறவினர்கள் கார் ஓட்டுனர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் உயிரிழந்த விஷ்ணுவின் மனைவி பிரேமா தனது குழந்தை நிற்கெதியில் விட்டு சென்றாயே குழந்தையின் பிறந்தநாள் அடுத்த மாதம் நடத்த திட்டமிட்டாயே என கதறி அழுதார்.இதனால் உறவினர்கள் கொந்தளிப்புகளுக்கு உள்ளாகினர். பதட்டமான சூழல் நிலவியதால் அங்கு சுமார் 30-க்கும் மேற்ப்பட்ட காவல்துறையின் பாதுகாப்பு பணிக்கென ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையடுத்து போலீசார் காரை இயக்கி சென்று விபத்தை ஏற்படுத்திய பாங்கிரஜை கைது செய்ததோடு காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இளைஞர்களிடம் வாக்குவாதம் செய்து இருசக்கர வாகனத்தை அணைத்துக்கொண்டே சென்று காரின் பக்கவாட்டு பகுதியில் முட்டி தள்ளி இளைஞர்கள் இருவரும் தூக்கி வீசப்படும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமணமாகி இரண்டரை வருடம் ஆகியுள்ள நிலையில் கணவன் விபத்தில் இறந்ததை ஏற்றுகொள்ள முடியாது தனது குழந்தையுடன் காவல்நிலையம் முன்பு மனைவி கண்ணீர்விட்டு அழுதபடியே நியாயம் கேட்டு போராடிய சம்பவம் அங்கிருந்தோரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
No comments
Thank you for your comments