நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 22-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
அகில இந்திய சிவாஜி மன்ற செயற்குழு உறுப்பினர் டி தணிகாசலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகர சிவாஜி மன்ற தலைவர் திருவேங்கடம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் கமிட்டிமாநில செயற்க்குழு உறுப்பினர் பத்மநாபன் .மாநகர தலைவர் நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அகில இந்திய சிவாஜி மன்ற துணைத் தலைவர் வி. ஜெயவேலு தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் காங்கிரஸ் பகுதி செயலாளர் பட்டு காமராஜ் மூத்த காங்கிரஸ் தலைவர் எம் கே சீனிவாசன். பிரபு மன்றம் சிவாஜிஸ்ரீதர். ரமேஷ் .பெருமாள். திருஞானம். லயன் ஆறுமுகம். பாரி. ராஜா. யூதா. கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறிஞர் அண்ணா லயன் சங்கம் சிவாஜி மன்றத்துடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தது. கலந்து கொண்ட அனைவருக்கும் சிவாஜி ரசிகர் மன்ற செய்தி தொடர்பாளர் நூல் கடை ராதாகிருஷ்ணன் நன்றிகளை தெரிவித்தார்.
No comments
Thank you for your comments