Breaking News

காஞ்சிபுரத்தில் 2 கடைகளில் மூடி..! வெளியில் 3 கிலோமீட்டரில் ஒரு கடை திறப்பு..! - மது பிரியர்கள் சாக்லேட் வழங்கி கொண்டாட்டம்..!


காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் பஜார் வீதிகளில் செயல் பட்டு வந்த இரண்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது.



கடன் செயலி (LOAN APP) மோசடி 
டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

இரண்டு கடைகள் மூடப்பட்டதற்கு தற்சமயம் ஒரு கடை காஞ்சிபுரம் அருகேயுள்ள தேனம்பாக்கம் பகுதியில் போலீசார் பாதுகாப்புடன் புதிதாக திறக்கப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் சாக்லெட் வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

சட்டசபை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு தமிழ்நாடு முழுவதும் 500 அரசு மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் 31 அரசு மதுபான கடைகள் மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் மற்றும்  சித்ரா குப்தர் கோவில் அருகே இருந்த மதுபான கடை மற்றும் மேட்டுதெரு மதுபான கடை மூடப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் கடையை மூடி இது போல் மூடி தற்போது காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தேனம்பாக்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதிதாக டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments