தொழில் முனைவோர்களுக்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
தமிழ்நாடு அரசு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோர்களுக்கென சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை இவ்வாண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (07-06-2023) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் தலைமையுரையாற்றிய திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்கள் இத்திட்டத்தின் கீழ் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோர் தொடங்கவிருக்கும் உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த தொழில் திட்டங்களுக்கு 65 சதவீத வங்கி கடனுதவியோடு 35 சதவீதம் அரசின் மானியம் வழங்கப்படுகிறது, மேலும் வட்டி தொகையில் 6 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. எனவே, பயனாளர்கள் தம் பங்காக விளிம்புத் தொகை செலுத்த வேண்டிய தேவை இல்லை. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு எந்தவித கல்வித் தகுதியும் தேவையில்லை, வயது வரம்பு 55க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
புதிய தொழில் முனைவோராகவும் ஏற்கனவே தொழில் தொடங்கி அதனை விரிவு படுத்த விரும்புவோரும் விண்ணப்பிக்கலாம். அதிக பட்ச மானிய தொகை ரூபாய் 1.50 கோடியும் வழங்கப்படுகிறது. எனவே இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் திரு சி. சுபாஷ் வரவேற்புரை வழங்கினார். இக்கருத்தரங்கில் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் திரு.வா.ச.வெங்கடேசன் திட்ட விளக்கவுரையாற்றினார்.
இக்கருத்தரங்கில் DICCI, SEEDS, ACITV, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பிரதிநிதிகளும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வட்டார மேலாளர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், பல்வேறு வங்கிகளின் மேலாளர்களும் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments