காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் தீர்த்த வாரி உற்சவம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் தீர்த்த வாரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திரளான பக்தர்கள் அனந்த சரஸ் திருக்குளத்தில் நீராடி சென்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரமோற்சவம் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
வைகாசி பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாளில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
தீர்த்த வாரி உற்சவத்தை ஒட்டி ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளப் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் பிரணகதி வரதர் சுவாமி, அத்தி வரதர் அனந்த சயனத்தில் உள்ள அனந்த சரஸ் திருக்குளத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோவில் பட்டாச்சாரியார்கள் பிரணகதி வரதருக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருக்குளத்தின் மூழ்கி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
அனந்த சரஸ் திருக்குளத்தில் மூழ்கிய பிரணகதி வரதருடன் திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு குளத்தில் முழ்கி புனித நீராடி சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
தீர்த்த வாரி உற்சவத்தை ஒட்டி அனந்த சரஸ் திருக்குளத்தில் பக்தர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் ஏராளமான போலீசாரும் தீயணைப்பு திரையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



No comments
Thank you for your comments