Breaking News

சுற்றுச்சூழல் குறித்த நேரடி கலந்தாய்வு கூட்டம் அறிவிப்பு

வேலூர்

தொழிற்சாலைகளுக்கு இசைவாணை வழங்குதல் மற்றும் அவற்றை கண்காணித்தல் மற்றும் மாசு தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்தல் ஆகியவை வாரியத்தின் சில முக்கியமான செயல்பாடுகளாகும்.

இந்த செயல்பாடுகளில் பெரும்பாலானவை கடந்த சில ஆண்டுகளில் இணையவழி மூலமாக செயல்படுத்தப்படுவதால் பொதுமக்கள் மற்றும் தொழில் முனைவோருடன் நேரடி கலந்துரையாடல் மிகவும் குறைந்துள்ளது.

வாரியத்தின் அதிநவீன இணையவழி வசதிகள் நிலையை அவ்வப்போது தெரிவித்தாலும், நேரடி கலந்துரையாடல் மூலம் மட்டுமே பொதுமக்கள் மற்றும் தொழில் முனைவோருடன் புரிதல் மற்றும் அதிக நம்பிக்கையை உருவாக்க முடியும்.

தொழிற்சாலைகள், பொது மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றுடன் நேரடி கலந்துரையாடல்களை எளிதாக்குவதற்கும், மிகவும் வெளிப்படையான மற்றும் நம்பகமான முறையில் செயல்படுத்துவதற்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் நேரடி கலந்தாய்வு கூட்டத்தை 05.04.2022 நாள் முதல் நடத்தி வருகின்றது. 

தனிநபர் / தொழிற்சாலைகள் / தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்/ பொதுநலச் சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க / சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள /  மாசுதொடர்பான பிரச்சினைகள் மற்றும் இசைவாணைகள் குறித்து புகார் செய்ய மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகள் /  கருத்துகளை தெரிவிக்க இந்த அமர்வில் பங்கேற்று மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அவர்களை சந்திக்கலாம்.

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் சுற்றுச்சூழல் குறித்த நேரடி கலந்தாய்வு ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி காலை 11 மணிக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், வேலூரில் நடைபெறுகின்றது.

தனிநபர் / விவசாயிகள் / தொழிற்சாலைகள் / தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் / பொது நலச்சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க / சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள / மாசு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இசைவாணைகள் குறித்து புகார் செய்ய மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகள் / கருத்துகளை தெரிவிக்க இந்த அமர்வில் பங்கேற்று மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அவர்களை சந்திக்கலாம். 

நேரடி கலந்துரையாடலில் கலந்து கொள்ளவிரும்புவோர்,  தங்கள் வருகைக்கு முன்னதாகவே இதற்காக வாரியத்தால் உருவாக்கப்பட்டுள்ள இணைய வழி செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. 

இதன் மூலம் வாரிய அதிகாரிகள் பங்கேற்பாளர்களுக்கு நேரடி கலந்துரையாடல் நாளில் அல்லது முடிந்தால் அதற்கு முன்னதாகவும் பதிலளிக்க இயலும். 

இதற்காக வாரிய இணையதளமான www.tnpcb.govin இல் OPEN HOUSE- என்ற இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் தங்கள் வருகையின் போது "ஆதார் அட்டையை” தவறாமல் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

இவ்வாறு  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தெரிவித்துள்ளார்.


இணையதளம் காண கிளிக் செய்யவும்  www.tnpcb.govin 



No comments

Thank you for your comments