வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் மழைநீர் அதிகமாக தேங்கும் இடங்கள் குறித்து ஆட்சியர் கள ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு நகராட்சி மற்றும் குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (10.06.2023) வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் மழைநீர் அதிகமாக தேங்கும் இடங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய் துறை உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வெள்ளத்தடுப்பு பணிகளை மழை காலம் வருவதற்கு முன் விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இவ்ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் மாங்காடு நகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய்களை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகளான, பரணிபுத்தூர் பகுதியில் நடைபெற்று கொண்டிருக்கும் ரூ.9.7 கோடியில்
90% நிறைவடைந்த கீழ்மட்ட கால்வாய் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து செம்பரபாக்கம் உபரி நீர் அடையாறு கால்வாய் சேரும் இடத்தில் ரூ.70 கோடி மதிப்பில் அகலப்படுத்தும் பணியினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதனை தொடர்ந்து வரதராஜபுரம், இராயப்பா நகரில் ரூ.70 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும், 80% பணிகள் முடிவடைந்த மூடுகால்வாய் பணிகளை பார்வையிட்டார். பின்னர் அனைத்து பணிகளும் துரிதமாக மேற்கொண்டு மழை காலம் வருவதற்கு முன்னர் முடிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
இவ் ஆய்வின் போது நகராட்சிகளின் மண்டல இணை இயக்குநர் திருமதி. சசிகலா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் திரு.பொதுப்பணித் திலகம், திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர், திரு.ஜா.சரவணகண்ணன், நகராட்சி ஆணையர் திருமதி.சுமா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


No comments
Thank you for your comments