Breaking News

பூமாலை வணிக வளாகம் மற்றும் இராஜாஜி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

 காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பூமாலை வணிக வளாகம் மற்றும் இராஜாஜி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.


காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பூமாலை வணிக வளாகம் மற்றும் இராஜாஜி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் இன்று (09.06.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

மகளிர் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பூமாலை வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள், கூட்டரங்கம் மற்றும் சுற்றுப்புறங்களை பார்வையிட்டு, மகளிர் சுய உதவி குழுக்களிடம் கலந்துரையாடினார்.


பின்னர் கலைஞர் நகர்ப்புற  மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பீட்டில், இராஜாஜி மார்க்கெட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 248 கடைகளை நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் விவரங்களை  குறித்து கேட்டறிந்தார். மேலும் அடிப்படை வசதிகள் ஆகிய குடிநீர், கழிவறை, வாகன நிறுத்துமிடம் மற்றும் பருவ மழை காலத்தில் மார்க்கெட் வளாக உட்புறத்தில்  மழை நீர் தேங்காவண்ணம் உரிய மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட பணிகளின் விவரங்களை கேட்டறிந்து, பணியினை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

இவ் ஆய்வின்போது மகளிர் திட்ட இயக்குநர் திருமதி.கே.கவிதா, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர்.திரு.க.கண்ணன், உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments