பத்ரகாளியம்மன் ஆலயம் வருஷாபிஷேக பூர்த்தி விழாவையொட்டி 108 வலம்புரி சங்கு அபிஷேக விழா
காஞ்சிபுரம் பத்ரகாளி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பத்ரகாளி அம்மன் ஆலய கும்பாபிஷேக நிறைவு பெற்று ஓராண்டு பூர்த்தி ஆனது தொடர்ந்து சிறப்பு யாகசாலை பூஜைகள் 108 வலம்புரி சங்கு அபிஷேகம். மற்றும் கலசாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மகாபூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்று 108 வலம்புரி சங்குகள் மற்றும் கலச புறப்பாடு நடைபெற்று அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகளும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இவ்விழா உபயத்தினை செய்திருந்த பாபுஷா குடும்பத்தினருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து.பரிவட்டம் கட்டி பிரசாதங்கள் கொடுத்து ஆசி வழங்கப்பட்டது.
இவ்விழா ஏற்பாடுகளை பத்திரகாளி அம்மன் தேவஸ்தானம் திருப்பணி குழுவினர். மற்றும் நிர்வாக குழுவினர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.




No comments
Thank you for your comments