பல்லவன் நகர் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு
இன்று (06.06.2023) சென்னையிலிருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலம் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறந்து வைத்ததையொட்டி, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவன் நகர் நகர்ப்புற நலவாழ்வு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கு ஏற்றி, தொடங்கி வைத்தார்கள்.
உடன் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க. செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் திரு.குமரகுருநாதன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பிரியாராஜ், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் திரு.க.கண்ணன் ஆகியோர் உள்ளனர்.


No comments
Thank you for your comments