Breaking News

ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சகோதர, சகோதரிகளுக்கு  விருத்தாச்சலம் அம்மா உணவகம் முன்பு, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.


உலகத்தையே உலுக்கிய, ஒடிசா ரயில் விபத்தில், 288 நபர்களுக்கு மேல் உயிரிழந்து உள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் ஆனது, நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்த சகோதர, சகோதரிகளுக்கு கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பாலக்கரை அம்மா உணவகம் முன்பு, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்துறை சேர்ந்த செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள்,  தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.

No comments

Thank you for your comments