Breaking News

காஞ்சிபுரத்தில் கணவரை கொலை செய்து விட்டு மனைவி தற்கொலை

காஞ்சிபுரம், ஜூன் 8:

காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியில் வியாழக்கிழமை கணவரை கொலை செய்து விட்டு மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகன் சந்தானம்(32)இவரது மனைவி வேண்டா(26) இருவருக்கும் ஒரு ஆண்டு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது.

இந்நிலையில் வேண்டா 6 மாத கர்ப்பிணியாகவும் இருந்துள்ளார். சந்தானம் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறத்துவதும், சந்தேகப்படுவதுமாகவும் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ நாளன்று குடும்பத் தகராறு காரணமாக தகராறு ஏற்பட்ட நிலையில் சந்தானத்தின் மீது கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்து விட்டு மனைவி வேண்டா தானும் அதே வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு பர்விஷிதா என்ற மகளும் உள்ளார்.

சம்பவம் தொடர்பாக சிவகாஞ்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments