கல்பனா சாவ்லா விருது-2023 அறிவிப்பு
துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது” ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5.00 இலட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் அடங்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர்.
2023-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் https://awards.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாக 30.06.2023-க்கு முன்பாக வரவேற்கப்படுகிறது.
மேலும், உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments